Need For Speed UnderGround v 1 முழு பதிப்பு
நீட் ஃபார் ஸ்பீடு (Need for Speed) (NFS ) என்பது எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கார்ப்பந்தய வீடியோ விளையாட்டுகளின் தொடராகும். இது கனடாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான இ.ஏ. பிளாக் பாக்ஸ் (EA Black Box) உள்ளிட்ட பல ஸ்டூடியோக்களால் உருவாக்கப்பட்டது. இது அனைத்து நேரத்துக்கும் பொருந்தக்கூடிய மிகுந்த வெற்றியீட்டியுள்ள கார்ப்பந்தய வீடியோ விளையாட்டுத் தொடராகும். அதோடு ஒட்டுமொத்தமாக அதிகளவில் வெற்றிபெற்ற ஒன்றாகும். 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிவந்த புள்ளிவிவரத்தின்படி, நீட் ஃபார் ஸ்பீடு தொடர்களிலுள்ள விளையாட்டுக்களின் 100 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகிவிட்டன.
இந்த தொடரானது உண்மையில் கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் டிஸ்டிங்டிவ் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, இந்நிறுவனம் இ.ஏ. கனடா என அழைக்கப்படுகிறது. இந்த விளையாட்டுத் தொடரானது, 1994 ஆம் ஆண்டில் வட அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா ஆகிய இடங்களில் நீட் ஃபார் ஸ்பீடு என்பதுடன் அறிமுகமானது. ஆரம்பத்தில், இந்த தொடரானது ஐந்தாம் தலைமுறை பணியகங்களுக்கு தனித்துவமாக இருந்தது, பின்னர் 2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் அனைத்து ஏழாம் தலைமுறை வீடியோ விளையாட்டு பணியகங்களிலும் கிடைத்தது. பல்வேறு தடங்களில் பல்வேறு கார்களை பந்தயத்துக்கு ஓட்டுவதையே இவ்விளையாட்டுக்கள் கொண்டுள்ளன, இந்தக் கார் பந்தயத்தின் ஒரு சிறிய பங்கில் காவல்துறையின் துரத்திப் பிடித்தல்களும் உள்ளடங்கும். ஜப்பானில், இந்த தொடர் ஓவர் ட்ரைவின் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. நீட் பார் ஸ்பீடு:ஹை ஸ்டேக்ஸ் (Need for Speed: High Stakes) இன் வெளியீட்டுக்குப் பின்னர் மேற்கத்திய பெயரைத் தழுவியது.நீட் ஃபார் ஸ்பீடு: அண்டர்கிரவுண்ட் முதல், இந்தத் தொடரை விளையாடும் முறையில் காரின் வெளிப்புற தனிப்பயனாக்கம் ஒருங்கமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த தொடரில் மூன்று விளையாட்டுக்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன
குறைந்தபட்ச கணினி தேவைகள் :
Windows 98/ME/2000/XP/7 (Run Administrator)
Pentium 3 veya AMD Athlon @ 700 MHz Islemci
128 MB RAM (2000/XP 256MB )
2.0 GB Sabit Disk Alani
32 MB Direct3D
DirectX 9.0
0 comments :
Post a Comment